மே 1-ல் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை
By DIN | Published On : 28th April 2023 10:38 PM | Last Updated : 28th April 2023 10:38 PM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி மதுபான கடைகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மே 1-ஆம் தேதி மதுபான கடைகள் விற்பனை இல்லாத நாளாக அரசு அறிவித்துள்ளது. எனவே, மாவட்டத்தில் இயங்கும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுபான கூடங்கள் அனைத்தும் மூடவேண்டும். மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...