கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம்
By DIN | Published On : 28th April 2023 10:39 PM | Last Updated : 28th April 2023 10:39 PM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை சாய் விளையாட்டு மைதானத்தில் மே 1 முதல் 15-ஆம் தேதி வரை மாவட்ட அளவிலான இருப்பிடமில்லா கோடைகால பயிற்சி முகாம் 16 வயதிற்குள்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் மாணவரல்லாதோருக்கான விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
முகாமில் தடகளம், கையுந்து பந்து, கால்பந்து, கூடைப்பந்து மற்றும் ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கு காலை, மாலை சிறந்த பயிற்சியாளா்களை கொண்டு பயிற்சியளிக்கப்படவுள்ளது. மேலும், முகாமில் கலந்து கொள்பவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சாா்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் மாணவரல்லாதோா் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...