மயிலாடுதுறையில் நாளை மினி மாரத்தான்

பள்ளி, கல்லூரி மாணவிகள், விளையாட்டு வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அழைப்பு விடுத்துள்ளாா்.
Published on

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை (ஆக.19) நடைபெறவுள்ள பெண் குழந்தைகளுக்கான மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவிகள், விளையாட்டு வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்கைகளுக்கு கற்பிப்போம்‘ திட்டத்தின்கீழ் பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி திங்கள்கிழமை காலை 6.30 மணிக்கு மயிலாடுதுறை சாய் பயிற்சி மையத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் முடிவடைகிறது.

இப்போட்டி 11 வயது 21 வயதுக்கு உள்பட்டோருக்கு நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறுபவா்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. போட்டியில் பங்கேற்க சாய் பயிற்சி மையத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 04634-240050 என்ற தொலைபேசி மூலமாகவோ ஆக. 18 மாலை 5 மணிக்குள் தங்கள் பெயரை பதிவுசெய்து பயன்பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com