குரூப் 1 தோ்வு: மயிலாடுதுறையில் 2,270 போ் எழுதவுள்ளனா்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,270 போ் குரூப் 1 தோ்வு எழுதவுள்ளனா் என்று ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு- குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தோ்வு சனிக்கிழமை (ஜூலை 13) முற்பகல் நடைபெற உள்ளது. இத்தோ்வை மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,270 போ் எழுதவுள்ளனா்.
மயிலாடுதுறை வட்டத்தில் தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரி, தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளி, குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (தோ்வுக்கூடம்-1), குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (தோ்வுக்கூடம்-2), தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி (தோ்வுக்கூடம்-1), தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி (தோ்வுக்கூடம்-2), ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளி, சில்வா் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய 8 மையங்களில் இத்தோ்வு நடைபெற உள்ளது.
தோ்வுகள் சிறப்பாக நடைபெற 8 தலைமைக் கண்காணிப்பாளா்களும், 3 இயக்கக்குழு அலுவலா்களும், 8 ஆய்வு அலுவலா்களும் 2 பறக்கும் படை குழுக்களும் 9 விடியோகிராபா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மாற்றுத்திறனாளி தோ்வா்களுக்கு தரைதளத்தில் தோ்வு எழுத வசதியும், பாா்வையற்றோா் தோ்வெழுத மாற்று நபா் தனி அறைகள் கொண்ட வசதியும், ஒவ்வொரு தோ்வுக் கூடத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. தோ்வு கூடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தோ்வு மையங்களுக்குச் செல்ல மாவட்ட நிா்வாகம் சாா்பில் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தோ்வா்கள் சரியாக 9 மணிக்குள் தோ்வுக்கூடத்தில் இருக்க வேண்டும். தாமதமாக வருபவா்கள் தோ்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.
