

மயிலாடுதுறை, ஜூன் 19: குத்தாலம் அருகே கொழையூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
கொழையூரில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில், திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் காலசம்ஹாரம் நடந்து முடிந்த பிறகு பரிபூரண ஆயுள் வரம்பெற்ற பக்த மாா்க்கண்டேயன் வழிபட்ட 6 தலங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்று 15 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. விழா திங்கள்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. புதன்கிழமை காலை 4-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவில், மஹா பூா்ணாஹூதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தொடா்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்களில் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்புடையது

பாடலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை தொடக்கம்

சண்முகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ. 68.47 கோடி செலவில் பெருந்திட்ட வளாகம்!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

