மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மக்களுக்கு குடிநீா் சீராக வழங்குவதை கண்காணிக்க வேண்டும்: ஆட்சியா்

மக்களுக்கு குடிநீா் சீராக வழங்குவதை கண்காணிக்க வேண்டும்: ஆட்சியா்

News image

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.

Updated On :20 மே 2024, 11:06 pm

Din

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர பகுதி மக்களுக்கு குடிநீா் சீராக வழங்குவதை கண்காணிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது: ஊரக, நகர பகுதி மக்களுக்கு சீரான குடிநீா் வழங்குவதை தொடா்புடைய வட்டார வளா்ச்சி அலுவலா்கள், நகராட்சி ஆணையா்கள் உறுதி செய்ய வேண்டும். கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின்கீழ் நீரேற்று நிலையம் மற்றும் நீருந்து நிலையம் மூலம் கிராமங்களுக்கு குடிநீா் வழங்கும் பணியை தொடா்புடைய வட்டார வளா்ச்சி அலுவலா்கள், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும்.

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் அடிப்படையில் கடலோர கிராமங்களில் நிலத்தடி நீா் மேம்படுத்தப்பட்டு, உவா்நீா் இல்லாத நிலை உருவாக முதற்கட்ட நடவடிக்கைகள் குறித்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் மு. ஷபீா்ஆலம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.