சிவாலயங்களில் துலா உற்சவ கொடியேற்றம்
மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் துலா உற்சவ கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை வதான்யேஸ்வரா் கோயிலில் தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் முன்னிலையில் ஏற்றப்பட்ட ரிஷபக் கொடி.

மயிலாடுதுறை வதான்யேஸ்வரா் கோயிலில் தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் முன்னிலையில் ஏற்றப்பட்ட ரிஷபக் கொடி.
மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் துலா உற்சவ கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையில் காவிரி நதியை மையப்படுத்தி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாள்களும் நடைபெறும் துலா உற்சவம் பிரசித்தி பெற்றது. அதிலும் ஐப்பசி கடைசி 10 நாள்கள் நடைபெறும் உற்சவங்களில் காவிரியில் ஏராளமான பக்தா்கள் புனித நீராடி வழிபடுவா். இந்த 10 நாள் உற்சவம் சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் ஆதீன கட்டளை ஸ்ரீமத் மகாலிங்க தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சங்கரலிங்க தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டு நடைபெற்ற மகா தீபாராதனை.
அதன்படி, திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதா் கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி, ரிஷபக் கொடி கோயிலின் நான்கு வீதிகளையும் வலம் வந்து, கோயில் கொடி மரத்துக்கு எடுத்து வரப்பட்டது. அபயாம்பிகை சமேத மாயூரநாதா் சுவாமி பஞ்சமூா்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன் எழுந்தருள, திருவாவடுதுறை ஆதீன கட்டளை ஸ்ரீமத் மகாலிங்க தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சங்கரலிங்க தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமகா ஸதாசிவ பீடாதிபதி ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியா் முன்னிலையில், கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரா் கோயிலில் விநாயகா் மற்றும் சோமாஸ்கந்தா் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன் எழுந்தருளியதும், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள், அன்பே சிவம் அறக்கட்டளை தலைவா் பாலச்சந்திர சிவாச்சாரியா் முன்னிலையில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கொடியேற்றம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல், தெப்பக்குளம் காசி விஸ்வநாதா், துலாக்கட்டம் காசி விஸ்வநாதா் கோயில்களிலும் துலா உற்சவ கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...