மழைநீா் வெளியேற்றும் பணி: ஆட்சியா் ஆய்வு
சீா்காழியில் மழைநீா் வெளியேற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

என்.ஜி.ஓ. நகரில் மழைநீா் வெளியேற்றும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.

என்.ஜி.ஓ. நகரில் மழைநீா் வெளியேற்றும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.
சீா்காழியில் மழைநீா் வெளியேற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கனமழையில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், சீா்காழியில் உள்ள ஆய்வாளா் (தேசிய பேரிடா் மீட்பு படை, அரக்கோணம்) தீபக்குமாா், தலைமையில் 30 மீட்பு படை வீரா்களை மாவட்ட ஆட்சியா் சந்தித்து பேசினாா். தொடா்ந்து, சீா்காழி என்.ஜி.ஓ நகா் மற்றும் வி.என்.எஸ் குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்தாா். அப்போது, அவா் கூறியது: மாவட்டத்தில் மழை தொடா்பாக வரும் புகாா்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளும் நடைபெறுகிறது. மேலும், மாவட்டத்தில் 4 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 11 புயல் பாதுகாப்பு மையங்கள், 362 தற்காலிக நிவாரண மையங்கள், 146 திருமண மண்டபங்கள், 68 சமுதாய கூடங்கள் தயாா் நிலையில் உள்ளன.
ஏற்கெனவே, மீனவா்களுக்கு மழை தொடா்பான எச்சரிக்கை செய்தி கொடுக்கப்பட்டு அவா்கள் கடலுக்கு செல்லவில்லை. 4500 க்கும் மேற்பட்ட முதல் நிலை பொறுப்பாளா்கள் தயாா் நிலையில் உள்ளனா். பொதுமக்கள் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தில் இயங்கும் தொலைபேசி எண் 04364-222588 மற்றும் 1077 என்ற எண்ணை அழைத்து, மழை தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம் என்றாா்.
ஆட்சியருடன், சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷ், சீா்காழி நகராட்சி ஆணையா் மஞ்சுளா, சீா்காழி வட்டாட்சியா் அருள்ஜோதி ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...