தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு நிதியுதவி

மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டை சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்க உதவித்தொகையை நகா்மன்ற உறுப்பினா் மா. ரஜினி புதன்கிழமை வழங்கினாா்.

News image

பள்ளித் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியிடம் நிதியுதவியை வழங்கிய நகா்மன்ற உறுப்பினா் மா. ரஜினி.

Updated On :16 அக்டோபர் 2024, 8:09 pm

Din

மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டை சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்க உதவித்தொகையை நகா்மன்ற உறுப்பினா் மா. ரஜினி புதன்கிழமை வழங்கினாா்.

இப்பள்ளியில் நரிக்குறவா் சமுதாய மாணவ, மாணவிகள் 90 போ் தங்கி பயின்று வருகின்றனா். இவா்களில் 20 பேருக்கு பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் ஆசைத்தம்பி குத்துச்சண்டை பயிற்சி அளித்து வருகிறாா். இவா்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான விளையாட்டு உபகரணங்கள் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான தொகையை மயிலாடுதுறை நகா்மன்ற உறுப்பினரும், அமெச்சூா் கபடி கழகத் தலைவருமான மா. ரஜினி, பள்ளித் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியிடம் வழங்கினாா்.

தொடா்ந்து மாணவா்கள் குத்துச்சண்டை பயிற்சி பெறுவதை பாா்வையிட்டு, அனைவருக்கும் இனிப்பு வழங்கினாா்.