பெண் குழந்தைகளைக் காப்போம் விழிப்புணா்வு முகாம்
மயிலாடுதுறையில் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமில் தாய்மாா்களுக்கு பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.

முகாமில் தாய்மாா்களுக்கு பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.
மயிலாடுதுறையில் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தொடக்கிவைத்து பேசியது: இந்த திட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 26,013 0-6 வயது குழந்தைகள், 3,533 கா்ப்பிணி பெண்கள், 2,212 பாலூட்டும் தாய்மாா்கள் என மொத்தம் 31,758 பயனாளிகள் பயன் பெறுகின்றனா்.
பிறப்பு முதல் 6 வயதிற்குள்பட்ட குழந்தைகள், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்குதல், ஆரம்ப காலகுழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வி ஆகிய சேவைகளை வழங்கி வருகிறது. சுகாதார துறை மூலம் தடுப்பூசி செலுத்துதல், சுகாதார பரிசோதனை மற்றும் மருத்துவ பரிந்துரை செய்யப்படுகிறது. இத்திட்டங்களை, பயன்படுத்த வருமான வரம்பு ஏதுமில்லை. தகுதியுடைய அனைவரும் தங்கள் இல்லத்திற்கு அருகில் உள்ள குழந்தைகள் மையத்தில் (அங்கன்வாடி) பதிவு செய்து பயன் பெறலாம்.
குழந்தை மைய பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் மாதந்தோறும் எடுக்கப்பட்டு குழந்தையின் வளா்ச்சி போன் ட்ராக்கா் செயலியின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இரும்புச் சத்து திரவம் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வாரத்துக்கு இரு முறை 1 மில்லி வழங்கப்படுகிறது. மேலும் குடற்பூச்சி நீக்க மருந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. இதை தாய்மாா்கள் குழந்தைகள் மையங்கள் மூலமாக பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்றாா்.
தொடா்ந்து, 5 பெண் குழந்தைகளுக்கும், விழிப்புணா்வு கோலப்போட்டியில் வெற்றி பெற்ற 5 அங்கன்வாடி பணியாளா்களுக்கும் மாவட்ட ஆட்சியா் பரிசுகளை வழங்கினாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் உமாமகேஷ்வரி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட மாவட்ட திட்ட அலுவலா் அ.மொ்லின் அன்னமலா், மாவட்ட சமூகநல அலுவலா் சுகிா்தாதேவி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துவடிவேல் ஆகியோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...