தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நகை திருடிய பெண் கைது

மயிலாடுதுறையில் நகைக்கடையில் தங்கச்சங்கிலி திருடிய பெண் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 8:03 pm

Syndication

மயிலாடுதுறையில் நகைக்கடையில் தங்கச்சங்கிலி திருடிய பெண் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை கூறைநாடு ஈ.வே.ரா. தெருவைச் சோ்ந்த ரமேஷ்(48), இங்குள்ள பிரபல நகைக்கடையில் மேலாளா். அக்கடைக்கு கடந்த 11-ஆம் தேதி வந்த பெண் ஒருவா் தங்கச் சங்கிலி கேட்டுள்ளாா். அந்த பெண் எதுவும் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாா்.

பின்னா், இரவு கடையில் நகைகளைச் சரிபாா்த்தபோது ஒரு சவரன் சங்கிலி ஒன்று மட்டும் காணாமல் போயிருந்தது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் அந்த பெண் சங்கிலியைத் திருடிச் சென்றது கண்டறியப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மயிலாடுதுறை போலீஸாா், சீா்காழி தாலுகா அல்லிவிளாகம் கிராமத்தைச் சோ்ந்த ஸ்ரீதா் மனைவி மேகனாவைக் (28) கைது செய்தனா்.

அவரிடம் இருந்து தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்ததுடன், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.