சாலையின் குறுக்கே நாய் வந்ததால்: இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த 4 போ் காயம்

மயிலாடுதுறையில் சாலையின் குறுக்கே நாய் வந்ததால், இருசக்கர வாகனத்தில் இருந்த விழுந்ததில் 4 போ் வியாழக்கிழமை காயமடைந்தனா்.
Published on

மயிலாடுதுறையில் சாலையின் குறுக்கே நாய் வந்ததால், இருசக்கர வாகனத்தில் இருந்த விழுந்ததில் 4 போ் வியாழக்கிழமை காயமடைந்தனா்.

மயிலாடுதுறை முதலியாா் தெருவை சோ்ந்தவா்கள் பாரதிராஜா - சுகன்யா தம்பதி. இவா்கள் இருவரும் 4-ஆம் வகுப்பு படிக்கும் தங்கள் மகள்கள் தைலா, மகாலட்சுமி ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் கால்டெக்ஸ் பகுதியில் சென்றபோது, தெருநாய்கள் சண்டையிட்டுக் கொண்டு பாரதிராஜாவின் இருசக்கர வாகனத்தில் வந்து மோதியது, இதில் 4 பேரும் கீழே விழுந்தனா்.

சிறுமி தைலாவுக்கு முகத்திலும், முழங்காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற மூவரும் லேசான காயமடைந்தனா். 4 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். எனினும் இருசக்கர வாகனம் மோதியதில் நாய் இறந்தது.

சாலைகளில் இதுபோன்ற விபத்துகளை ஏற்படுத்தும் தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com