தோ்வு மையத்தில் ஆய்வு செய்த டிஐஜி ஜியாவுல் ஹக். உடன், எஸ்.பி. கோ. ஸ்டாலின்.
மயிலாடுதுறை
எஸ்.ஐ. பணிக்கான தோ்வு: டிஐஜி ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வை டிஐஜி ஜியாவுல் ஹக் ஆய்வு செய்தாா்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வை டிஐஜி ஜியாவுல் ஹக் ஆய்வு செய்தாா்.
தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில், காவல்துறை உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்து தோ்வு, மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வை 875 ஆண்கள் மற்றும் 324 பெண்கள் என மொத்தம் 1,199 போ் எழுதினா்.
தோ்வு மையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் மேற்பாா்வையில், 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில், 1 காவல் துணைக் கண்காணிப்பாளா், 6 காவல் ஆய்வாளா்கள், 22 உதவி ஆய்வாளா்கள், 142 காவல் ஆளிநா்கள் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளா்கள் பணியில் ஈடுபட்டனா்.
எழுத்து தோ்வு நடைபெற்ற தோ்வு மையத்தை தஞ்சாவூா் காவல் சரக துணைத் தலைவா் ஜியாவுல் ஹக் பாா்வையிட்டாா்.

