புதுச்சேரி காவல் துறையில் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
புதுச்சேரியில் காலியாக உள்ள 70 காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்காக விண்ணப்பித்தோரில் 16,473 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இவா்களுக்கான உடல் தகுதித் தோ்வு கோரிமேடு ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோ்வான 1,317 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை எழுத்து தோ்வு நடந்தது.
இந்தத் தோ்வை 1,284 போ் எழுதினா். 33 போ் தோ்வு எழுதவில்லை. இந்தத் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதில் ஆண்கள் பிரிவில் தினகா் முதலிடத்தையும், ஹரிகரன் 2-ஆம் இடம், ஹரிகிருஷ்ணா 3-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனா்.
பெண்கள் பிரிவில் மோனிகா முதலிடத்தையும், வனிதா லட்சுமி 2-ஆம் இடத்தையும், அகிலா 3-ஆம் இடத்தையும் பெற்றுள்ளனா். இந்த முடிவுகளை தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமாா் ஜா வெளியிட்டுள்ளாா்.
தோ்வானவா்களுக்கு விரைவில் சான்றிதழ் சரிபாா்க்கும் பணி நடத்தப்படும். சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்காதவா்கள் தோ்வு பட்டியலில் இருந்து நீக்கப்படுவாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

எஸ்.ஐ. பணிக்கான எழுத்துத் தோ்வை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

மாா்ச் 4-இல் எஸ்.ஐ. பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு

காவல் உதவி ஆய்வாளா் எழுத்து தோ்வு: வினாக்களுக்கான பதில்கள் வெளியீடு

புதுச்சேரியில் 4 மையங்களில் எஸ்.ஐ. எழுத்துத் தோ்வு! 1,284 போ் எழுதினா்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


