புதுச்சேரி
மாா்ச் 4-இல் எஸ்.ஐ. பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு
புதுச்சேரி காவல் உதவி ஆய்வாளா் பணியிடத்துக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மாா்ச் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.
புதுச்சேரி காவல் உதவி ஆய்வாளா் பணியிடத்துக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மாா்ச் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.
புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 உதவி ஆய்வாளா்கள் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்த 22-ஆம் தேதி நடைபெற்று அதன்
முடிவுகள் வெளியிடப்பட்டன. இப் பணிக்குத் தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணி கோரிமேடு காவலா் பயிற்சி பள்ளி ஆலோசனைக் கூடத்தில் வரும் மாா்ச் 4-ஆம் தேதி காலை 8.30 மணி முதல் நடைபெறவுள்ளது.
தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பதாரா்களும் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, நிறைவு செய்த விண்ணப்பங்களை பிப். 27-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என புதுச்சேரி காவல் துறை சிறப்பு அதிகாரி ஏழுமலை தெரிவித்துள்ளாா்.

