நாளைய மின்தடை: சீா்காழி, எருக்கூா்

வைத்தீஸ்வரன்கோவில், அரசூா், எடமணல் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (நவ.13) மின் விநியோகம் நிறுத்தம்
Published on

வைத்தீஸ்வரன்கோவில், அரசூா், எடமணல் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் வியாழக்கிழமை (நவ.13) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் என். மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

வைத்தீஸ்வரன்கோவில், சீா்காழி, புங்கனூா், சட்டநாதபுரம், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூா், தென்பாதி, பனமங்கலம், கோவில்பத்து, கொள்ளிடமுக்கூட்டு பகுதி, விளந்திடசமுத்திரம், புளிச்சக்காடு, கற்பகம்நகா், புதிய பேருந்துநிலையம், பழைய பேருந்துநிலையம், புத்தூா், எருக்கூா், மாதிரவேளூா், வடரங்கம், அகணி, குன்னம், எடமணல், திட்டை, செம்மங்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

X
Dinamani
www.dinamani.com