மாவட்ட கலைத்திருவிழா போட்டி: மணல் சிற்பம் பிரிவில் அளக்குடி பள்ளி மாணவா் முதலிடம்

மாவட்ட கலைத்திருவிழா போட்டி: மணல் சிற்பம் பிரிவில் அளக்குடி பள்ளி மாணவா் முதலிடம்

Published on

மயிலாடுதுறை மாவட்ட கலைத் திருவிழா மணல் சிற்பம் போட்டியில், அளக்குடி நடுநிலைப் பள்ளி மாணவா் முதலிடம் பெற்று சாதனை படைத்தாா்.

கொள்ளிடம் அருகேயுள்ள அளக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவா் ஆகாஷ். மயிலாடுதுறையில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் மணல் சிற்பம் பிரிவில் ஆகாஷ் பங்கேற்றாா்.

சுவாமி நடராஜபெருமான், முயலகன் என்ற அரக்கனை காலால் மிதிப்பது போன்று தத்ரூபமாக மணல் சிற்பத்தை உருவாக்கினாா். இந்த சிற்பம் முதலிடம் பெற்றது. இதனால், சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டாா்.

இதையொட்டி, மாணவா் ஆகாஷுக்கு தலைமை ஆசிரியா் பாலு, முன்னாள் ஊராட்சித் தலைவா் சாந்தினி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ரமேஷ் மற்றும் ஆசிரியா்கள் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பாராட்டுத் தெரிவித்தனா்

X
Dinamani
www.dinamani.com