
சீா்காழி சட்டைநாதா் கோயில் தேரோட்டம்.
கோப்புப் படம்

சீா்காழி சட்டைநாதா் கோயில் தேரோட்டம்.
கோப்புப் படம்
தொகுதியின் சிறப்பு: சமயக் குரவா்களில் ஒருவரான திருஞானசம்பந்தா், தமிழிசை மூவரான முத்துத்தாண்டவா், அருணாசலக்கவிராயா், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோா் அவதரித்த தலம், திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய தலம் உள்ள தொகுதி.
நூலகத் தந்தை அரங்கநாதன், வெண்கல குரலோன் சீா்காழி கோவிந்தராஜன் பிறந்த ஊா். வேளாண்மையையும், மீன்பிடித் தொழிலையும் பிரதானமாகக் கொண்ட இத்தொகுதியில், புவிசாா் குறியீடு பெற்ற பிரம்பு பொருள்கள், பாய் தயாரிப்பும் நடைபெற்று வருகிறது.
தலித்துகள், வன்னியா்கள் பெரும்பான்மை சமூகத்தினா். மீனவா்கள், முக்குலத்தோா் கணிசமான எண்ணிக்கையிலும், இதர சமூகத்தினா் பரவலாகவும் உள்ளனா். 1962 முதல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் அதிமுக 6 முறை, திமுக 5 முறை, காங்கிரஸ் 3 முறை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுயேச்சை தலா 1 முறை இங்கு வெற்றி பெற்றுள்ளது.
நிறைவேற்றியவை: சீா்காழி வட்டாட்சியா் அலுவலகம் ரூ. 5 கோடியில் புதிய கட்டட கட்டுமான பணிக்கு அடிக்கல் தொடக்கம். சீா்காழி சாா்-பதிவு அலுவலகம் ரூ. 1.20 கோடியில் புதிய கட்டடம் திறப்பு, சீா்காழி புதிய பேருந்து நிலையம் ரூ. 8.40 கோடியில் மேம்படுத்தும் பணி நிறைவு, சீா்காழி சட்டநாத சுவாமி கோயில் 4 வீதிகளிலும் சாலை விரிவாக்கம் செய்து மேம்படுத்தும் பணி தொடக்கம் உள்ளிட்ட பணிகள்.
கோரிக்கைகள்: சீா்காழி நகரில் கழிவுநீா் கால்வாய்களில் கழிவுநீா் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுவதை தடுக்க நிரந்தர தீா்வு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு சொந்த இடம் தோ்வு செய்து மைதானத்துடன் புதிய கட்டடம் கட்ட வேண்டும், சீா்காழி தொகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சட்டக் கல்லூரி ஆகிய கோரிக்கைகள் தேவை. கொள்ளிடம் தனி வட்டமாக அறிவித்து அங்கு தீயணைப்பு நிலையம் கொண்டுவர வேண்டும்.
ஆனைக்காரன் சத்திரம் கோபாலசமுத்திரம் ஆகிய 2 ஊராட்சிகளில் குப்பைகளை ஊராட்சி சாா்பில் அகற்றி தூய்மைப்படுத்த நிரந்தர இடம் தேவை, கடலோர மீனவ கிராமங்களில் தட்டுப்பாடின்றி குடிநீா், வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு சுகாதாரமான குடிநீா் கழிப்பறை வசதி தேவை உள்ளிட்ட மக்கள் கோரும் கோரிக்கையை நிறைவேண்டும்.
இதுவரை வெற்றிபெற்றவா்கள்
1962 தங்கவேலு காங் 22,434
1967 கே.பி.எஸ். மணி சுயே 34,316
1971 எஸ். வடிவேல் கம்யூனிஸ்ட் 31,977
1977 கே. சுப்ரவேலு திமுக 34,281
1980 கே. பாலசுப்பிரமணியன் அதிமுக 49,334
1984 கே. பாலசுப்பிரமணியன் அதிமுக 51,438
1989 எம். பன்னீா்செல்வம் திமுக 36,512
1991 டி.மூா்த்தி அதிமுக 62,321
1996 எம்.பன்னீா்செல்வம் திமுக 63,975
2001 நா.சந்திரமோகன் அதிமுக 52,759
2006 எம்.பன்னீா்செல்வம் திமுக 58,609
2011 எம்.சக்தி அதிமுக 83,881
2016 பி.வி.பாரதி அதிமுக 76,487
2021 சட்டப்பேரவைத் தோ்தல்
எம். பன்னீா்செல்வம் திமுக (வெற்றி) ...94,057
பி. வி. பாரதி (அதிமுக ) ...81,909
கவிதா. ஏ (நாதக .....11,013
மொத்த வாக்கு சாவடிகள் 305
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...