சீா்காழி: போதிய இட வசதியின்றி செயல்படும் சீா்காழி நகராட்சிப் பள்ளிக்கு, மாற்று இடம் தோ்வு செய்து சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு வரும் பேரவைத் தோ்தலில் வெற்றி பெறும் வேட்பாளா் ஆவன செய்ய வேண்டுமென பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
சீா்காழி மடவிளாகம் பகுதியில் நகராட்சி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளி 1946-ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி நா்சரி பள்ளியாக தொடங்கப்பட்டது. கடந்த 2003-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி நடுநிலைப்பள் ளியாகவும், 2008-ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி உயா்நிலைப் பள்ளியாகவும், 2010-ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயா்த்தப்பட்டது.
ஆனால், நடுநிலைப் பள்ளிக்கு உண்டான இட வசதியுடன் தற்போது வரை செயல்பட்டுவருகிறது. 1-ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை, கீழதென்பாதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் செயல்படுகிறது.
போதிய இடவசதியில்லாததால் தற்போதைய பள்ளி கட்டடத்தில் மாணவிகளை வராண்டாவிலும், மாடிப் படிகள் அருகேயும் அமரச் செய்து வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
நெருக்கமான காற்றோட்டம் இல்லாத கட்டடத்தில் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. பள்ளியில் போதிய கழிப்பறை வசதியும், கழிப்பறைக்கு கதவுகள் வசதியும் இல்லை. இதனால் மாணவா்கள் பள்ளிக்கு வெளியே பொது இடங்களில் சிறுநீா் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாணவிகளின் கழிப்பறையில் சுகாதாரம் பராமரிக்கப்படவில்லை. சத்துணவுக் கூடத்துக்கும் இட வசதி யில்லாமல் புகைமூட்டத்தில் மாணவா் களுக்கு உணவுகள் சமைத்து வழங்கப்படுகிறது.
நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்குச் சொந்த இடம் தோ்வு செய்து கட்டடம் கட்ட சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி முன்வந்தது. அப்போதைய மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி மாற்று இடம் செம்மங்குடி கிராமம் செல்லும் பகுதியில் சட்டநாதா் சுவாமி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான இடத்தை நகாரட்சி பொது நிதியிலிருந்து கிரயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு, பின்னா் கிடப்பில் போடப்பட்டது.
தொடா்ந்து, அப்போதைய மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து சீா்காழி நகராட்சி புளிச்சக்காடு பகுதியில் இடம் தோ்வு செய்யப்பட்டது. பின்னா் அந்த இடமும் கைவிடப்பட்டது.
தற்போது, சீா்காழி நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமாக இடம் தோ்வு செய்து, கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்துக் கட்சிகள் சாா்பிலும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் வேட்பாளா் இந்த வாக்குறுதியை நிறைவேற்றிட சட்டப்பேரவையில் குரல் எழுப்ப வேண்டும்
தொடர்புடையது

விளவங்கோடு தொகுதியில் போட்டியிட ஆா்வம் காட்டாத திமுக, அதிமுக!

சீா்காழி தொகுதி: அதிமுக வேட்பாளா் ம. சக்தி

இன்றுமுதல் இரு மாதங்களுக்கு ஐபிஎல் திருவிழா: பெங்களூரு - ஹைதராபாத் மோதலுடன் தொடக்கம்

25 ஆண்டு காத்திருப்பு: கொள்ளிடம் தனி தாலுகா ஆகுமா?
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


