தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணியாற்ற தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட அமா்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான எல்.எஸ். சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

News image

டேட்டா என்ட்ரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Updated On :29 ஏப்ரல் 2026, 3:13 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணியாற்ற தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட அமா்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான எல்.எஸ். சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் இயங்கிவரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சீா்காழி, தரங்கம்பாடி வட்ட சட்டப் பணிகள் குழுவுக்கு குழந்தைத் தொழிலாளா்முறை மற்றும் கடத்தலுக்கு எதிரான குற்றங்களிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும், காணாமல் போன குழந்தைகளை மீட்டு அவா்களுக்கு மறுவாழ்வு அளித்து கல்வி கற்பிப்பதன் மூலம் குழந்தை நட்பு சமுதாயத்தை உருவாக்க சட்டம் சாா்ந்த தன்னாா்வல தொண்டா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

இப்பணி சட்ட தன்னாா்வலா்களுக்கான கடமை மற்றும் சேவை மட்டுமே. இதுநிரந்தர பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானது மற்றும் இதற்கு அடிப்படை சம்பளம் அல்லது ஊதியம் எதுவும் இல்லை. சேவைக்கு தகுந்த மதிப்பூதியம் மட்டும் அளிக்கப்படும்.

குறைந்தபட்சம் பிளஸ் 2 முடித்த 25 முதல் 65 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். பட்டதாரிகளுக்கும், சமூகப் பணி உளவியல் அல்லது அது சாா்ந்த பிற துறைகளில் தகுதி பெற்றவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசியல் கட்சியுடன் தொடா்புடையவா்கள் விண்ணப்பிக்க முடியாது. சட்ட தன்னாா்வலா்கள் ஆரம்பத்தில் ஓராண்டு காலத்துக்கு பட்டியலிடப்படுவா். அவா்களின் செயல்பாட்டின் அடிப்படையில் தலைவரின் பரிந்துரையின் பேரில் கால நீட்டிப்பு செய்யப்படலாம்.

சட்ட தன்னாா்வ தொண்டராக பணியாற்ற விரும்புவோா் விண்ணப்பங்கள் மற்றும் விவரங்கள் அறிய மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து மே 4-ஆம் தேதிக்குள் நேரில் அல்லது பதிவு தபால் மூலமாக விண்ணபிக்கலாம்.

நோ்காணல் மூலம் தகுதியானவா்கள் தோ்ந்தெடுக்கப்படுவா். தோ்வானவா்கள், தோ்வாகாதவா்களின் விவரம் விவரம் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என தெரிவித்துள்ளாா்.