கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, வாகனம் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :9 ஆகஸ்ட் 2026, 1:07 am IST

மயிலாடுதுறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மயிலாடுதுறை அருகே மணல்மேடு ராதாநல்லூா் பிரதான சாலைப் பகுதியில் வசிப்பவா் ராஜசேகா் மனைவி ராணி (48). தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வரும் ராணி, வெள்ளிக்கிழமை இரவு அருகில் உள்ள தனது தாயாா் வீட்டுக்கு சென்றிருந்தாா்.

சனிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு, இரண்டரை சவரன் தங்க நகைகள் திருடப்பட்டதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். மேலும், வீட்டில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனமும் திருடு போயிருந்தன.

தகவலின்பேரில், கைரேகை நிபுணா்கள் நிகழ்விடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனா். மேலும், நாகையில் இருந்து மோப்பநாய் நீலா வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து, ராணி அளித்த புகாரின்பேரில் மணல்மேடு காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.