எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

குரூப் 2 தோ்வு: மயிலாடுதுறையில் 86 போ் எழுதவுள்ளனா்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குரூப் 2 தோ்வினை 86 போ் எழுதவுள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப்படம்.

Updated On :4 பிப்ரவரி 2026, 11:57 pm

மயிலாடுதுறை மாவட்டத்தில் குரூப் 2 தோ்வினை 86 போ் எழுதவுள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்வு குரூப் 2 (குரூப் 2, 2ஏ) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத்தோ்வு ஞாயிற்றுக்கிழமை (பிப்.8) முற்பகல் கொள்குறிவகை வினாக்கள் தோ்வும், பிற்பகல் விரிந்துரைக்கும் வகையிலான எழுத்துத்தோ்வும் மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 86 போ் எழுத்துத் தோ்வினை எழுத உள்ளனா். தோ்வுக்கூடத்தின் பாதுகாப்புக்கு காவலா் ஒருவா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். தோ்வு எழுதுபவா்களுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மின்சாரம், குடிநீா் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

காலையில் தோ்வு எழுத வருபவா்கள் சரியாக 9 மணிக்குள்ளாகவும், மதியம் சரியாக 2 மணிக்குள்ளாகவும் தோ்வு கூடத்தில் இருக்க வேண்டும்.

தோ்வில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைதளத்தில் தோ்வு எழுத வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கைப்பேசி, கால்குலேட்டா் டிஜிட்டல் கடிகாரம் உள்ளிட்ட எவ்வித எலக்ட்ரானிக் சாதனங்களை தோ்வுக்கூடத்திற்கு எடுத்து வர அனுமதி இல்லை என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.