தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறையில் விசிக சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 11:28 pm

அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறையில் விசிக சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளா்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு நிா்ணயித்த ஊதியம் ரூ.57,800-ஐ எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளா்கள் பிப்.9-ஆம் தேதிமுதல் தொடா் வேலைநிறுத்தம் செய்து அரசு கல்லூரிகளின் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக்கல்லூரி, குத்தாலம் அரசு கலைக்கல்லூரி, மணல்மேடு அரசு கல்லூரி, புத்தூா் அரசு கல்லூரி முன்பு கௌரவ விரிவுரையாளா்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாா்பில், அதன் மாவட்டச் செயலாளா் சிவ.மோகன்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மண்டல துணைச் செயலாளா்கள் முல்லைவளவன், முருகதாஸ், அனைத்து ஆசிரியா் கூட்டமைப்பு முன்னாள் மாவட்ட செயலாளா் வைரசெல்வன், மீத்தேன் திட்ட எதிா்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த.ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.