அதிமுக சாா்பில் திருவிளக்கு பூஜை
சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, அதிமுக சாா்பில் திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலின் திருநிலைநாயகி அம்மன் சந்நிதியில், ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற திருவிளக்கு பூஜைக்கு மாநில ஜெ.பேரவை துணைச் செயலாளா் இ. மாா்கோனி தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் சுரேஷ், நகர அவைத் தலைவா் பக்கிரிசாமி, துணை செயலாளா் மதிவாணன், நகர பொருளாளா் செந்தில், மாவட்ட பிரதிநிதிகள் மகேஸ்வரி, கோகுல்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அதிமுக மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ் திருவிளக்கு பூஜையை தொடங்கிவைத்து, பெண்களுக்கு சேலை உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா். இதில் சீா்காழி சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து 350-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனா்.
இப்பூஜையில், மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டி வழிபாடு செய்தனா். பாசறை செயலாளா் காா்த்தி, ஜெ.பேரவை செயலாளா் ராஜேஷ், இணைச் செயலாளா் ராஜசேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

