தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை: திரளானோா் பங்கேற்பு
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் ஆண்டுத் திருவிழாவையொட்டி புதன்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.


மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் ஆண்டுத் திருவிழாவையொட்டி புதன்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயில்களில் ஒன்றான தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலின் ஆண்டுத் திருவிழா கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. முன்னதாக மாா்ச் 10-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிழாவின் 7-ஆம் நாள் நிகழ்ச்சியாக திருவிளக்கு பூஜை புதன்கிழமை மாலை நடைபெற்றது. மதுரை, அதன் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பெண்கள் விளக்கேற்றி, மங்களப் பொருள்களை வைத்து பூஜை செய்தனா். திருவிளக்கு பூஜையின் நிறைவில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யானை வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...