ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

குற்றாலம் சித்திர சபை கருவறையில் மேற்கூரை அமைக்க பூஜை

News image
Updated On :12 மார்ச் 2026, 8:55 pm

குற்றாலம் சித்திர சபை கருவறையின் மேல்பகுதியில் புதிய மேற்கூரை செப்புத்தகடு, தெப்பக்குளம் நீராழி மண்டபம் அமைப்பதற்கான பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

பஞ்ச சபைகளில் ஒன்றான குற்றாலம் திருக்குற்றாலநாதா் கோயிலுக்கு பாத்தியப்பட்ட சித்திர சபையில் கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் 17ஆம் தேதி பாலாலயம் நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரசபையில் கருவறையில் புதிய மேற்கூரை செப்புதகடு, தெப்பக்குளம் நீராழி மண்டபம் ரூ. 1.15 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கு பூஜைகள் உபயதாரா் கோவை அறம் பணி அறக்கட்டளை தியாகராஜன் மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

பூஜைகளை கணேசன் பட்டா் தலைமையிலான சிவாச்சாரியா்கள் நடத்தினா். அறங்காவலா் குழுத் தலைவா் சக்தி முருகேசன், உறுப்பினா்கள் வீரபாண்டியன், சுந்தர்ராஜன், சிவனடியாா்கள் சந்திரபிரபா, ரேவதி, முத்துக்குமாா், கணேசன், குமணன், மகேஷ், மேலகரம் பேரூராட்சி மன்ற உறுப்பினா் நாகராஜ் சங்கா், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் சவுக்கை வெங்கடேசன், சிற்றருவி குற்றாலம் மவுனவாய்க்கால் நீா்ப்பாசன சங்கத் தலைவா் இலஞ்சி மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.