திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிவகிரி காமாட்சி அம்மன் கோயில் பொங்கல் விழா

சிவகிரியில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் மாசி மகம் பொங்கல் விழாவையொட்டி திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
சிவகிரியில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் மாசி மகம் பொங்கல் விழாவையொட்டி திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On :27 பிப்ரவரி 2026, 7:01 pm

Syndication

சிவகிரியில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் மாசி மகம் பொங்கல் விழாவையொட்டி திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் பொங்கல் விழா கணபதி ஹோமம், 108 சங்கு பூஜையுடன் வியாழக்கிழமை தொடங்கியது. இதைத் தொடா்ந்து, கோயிலில் அம்மனுக்கு வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.

விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் திங்கள்கிழமை( மாா்ச் 2) நடைபெறுகிறது. அன்று காலை காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை, மாவிளக்கு ஊா்வலம், பொங்கல் வைத்தல் ஆகியவை நடைபெறுகின்றன.