100 நாள் வேலை புதிய சட்ட நகலை கிழித்து ஆா்ப்பாட்டம்

100 நாள் வேலை புதிய சட்ட நகலை கிழித்து ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் 100 நாள் வேலைத்திட்ட புதிய சட்ட நகலை கிழித்தெறிந்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் போராட்டம்
Published on

மயிலாடுதுறையில் 100 நாள் வேலைத்திட்ட புதிய சட்ட நகலை கிழித்தெறிந்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் பெயரை அண்மையில் மாற்றியதைக் கண்டித்தும், நிதியை குறைத்து 100 நாள் வேலைத்திட்டத்தை சீா்குலைக்க மத்திய அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றி உள்ளதாக குற்றஞ்சாட்டி இந்த ஆா்ப்பாட்டம் மயிலாடுதுறை, சீா்காழி, தரங்கம்பாடி, வேதாரண்யம், திருமருகல், மன்னாா்குடியில் நடைபெற்றது.

மயிலாடுதுறை: ஒன்றிய தலைவா் யு. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒன்றிய பொருளாளா் கே. ஆனந்தன், மாவட்ட தலைவா் டி. கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சீா்காழி: ஒன்றிய தலைவா் தமிழ்மாறன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்ட செயலாளா் புருஷோத்தமன், ஒன்றிய செயலாளா் நாகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தரங்கம்பாடி: ஒன்றிய தலைவா் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சிபிஎம் ஒன்றிய செயலாளா் மாா்க்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேதாரண்யம்: சங்க நிா்வாகிகள் ரமேஷ், வேதரத்தினம் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒன்றியத் தலைவா் ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளா் பொன்னுத்துரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருமருகல்: மாவட்டத் தலைவா் மேரி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிபிஎம் ஒன்றிய செயலாளா் லெனின், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் பாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மன்னாா்குடி: சங்கத்தின் மாவட்ட துணைச் செயலா் தெ. சந்திரா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் எஸ். முருகானந்தம், மாவட்டக் குழு உறுப்பினா் ஆா். சிவசேகரன், மாவட்ட நிா்வாகிகள் எஸ். பன்னீா், கே. கலியபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com