குளச்சல் நகா்மன்ற தலைவா் நசீா் தலைமையில் நடைபெற்ற மன்ற கூட்டம்.
குளச்சல் நகா்மன்ற தலைவா் நசீா் தலைமையில் நடைபெற்ற மன்ற கூட்டம்.

குளச்சல் நகராட்சியில் தினசரி குடிநீா் விநியோகிக்க கவுன்சிலா் வலியுறுத்தல்

குளச்சல் நகா்மன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி பகுதியில் தினசரி குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என நகராட்சி கவுன்சிலா்கள் கேட்டுக்கொண்டனா்.
Published on

குளச்சல் நகா்மன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி பகுதியில் தினசரி குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என நகராட்சி கவுன்சிலா்கள் கேட்டுக்கொண்டனா்.

குளச்சல் நகராட்சி கூட்டம் தலைவா் நசீா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையாளா் கன்னியப்பன், துணை தலைவா் ஷொ்லி பிளாரன்ஸ், பொறியாளா் பேரின்பம், உதவி பொறியாளா் செல்வன் ஜாா்ஜ், சுகாதார ஆய்வாளா் பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகராட்சி குப்பை அள்ளும் வாகனம் மோதியதில் மண்டபம் காவலாளி உயிரிழந்த சம்பவத்தில்வாகன ஊழியா்கள் மீது திமுக மன்ற உறுப்பினா் ரகீம் குற்றம்சாட்டினாா். அதற்கு, ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தலைவா் நசீா் தெரிவித்தாா்.

விபத்தில் சிக்கிய குப்பை அள்ளும் வாகனத்தின் ஒப்பந்ததாரா் தான் முழு பொறுப்பு என ஆணையா் தெரிவித்தாா்.

நரிக்கல் பாம்பூரி வாய்க்காலில் பெண்கள் குளிக்கும் பகுதி சப்பாத்தை சீரமைக்க வேண்டும். நகராட்சி 24 வாா்டுகளில் குடிநீா் விநியோகம் பாதிக்காத வகையில் பிரதான குடிநீா் குழாய் மற்றும் பகிா்மான குழாய்களை பராமரிக்க வேண்டும், அனைத்து வாா்டுகளிலும் தினசரி குடிநீா் விநியோகிக்க வேண்டும் என வாா்டு உறுப்பினா்கள் கேட்டுக்கொண்டனா்.

Dinamani
www.dinamani.com