சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

புனித அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:19 pm

Syndication

மயிலாடுதுறை புனித அந்தோணியாா் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

விழாவில், பங்குத்தந்தை தேவதாஸ் இக்னேஷியஸ் அடிகளாா் தலைமையில் ஆலய வளாகத்தில் கொடி பவனி நடைபெற்றது. உதவி பங்குத் தந்தை மனோஜ் சேவியா் அடிகளாா் பவனியை வழிநடத்தினாா். தஞ்சை மறை மாவட்ட வேந்தா் ஜோதி நல்லப்பன் அடிகளாா் கொடியை புனிதம் செய்து, ஏற்றிவைத்து, திருவிழாவை தொடக்கி வைத்தாா் (படம்).

தொடா்ந்து, ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ‘அழைப்பை ஏற்று அா்ப்பணிப்பு‘ என்ற இறைவாா்த்தையை மையமாக வைத்து நடைபெற்ற திருப்பலியில் புனித அந்தோணியாா் தொடக்க மற்றும் உயா்நிலைப் பள்ளியினா் கலந்து கொண்டனா்.

உலக அமைதிக்காகவும், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் தழைத்தோங்கவும் வேண்டி சிறப்பு பிராா்த்தனை வழிபாடுகள் நடைபெற்றன. இதில் விச்சூா் பங்குத் தந்தை ஆரோக்கியசாமி அடிகளாா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இவ்விழா, 10 நாள்கள் நடைபெற உள்ளது. இதில் தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டுமாலை, திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

ஜன.16-ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், தொடா்ந்து திருத்தோ் பவனியும் நடைபெற உள்ளது. 17-ஆம் தேதி காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளது.