பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ராஜமன்னியபுரம் அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

ஆறுமுகனேரி, ராஜமன்னியபுரம், புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 10:01 pm

Syndication

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி, ராஜமன்னியபுரம், புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி மறை மாவட்ட பி.எம்.எஸ்.எஸ். இயக்குநா் அமலன் அடிகளாா் தலைமையில் கொடியேற்றம், திருப்ப­லி நடைபெற்றது. உவரி உதவி பங்குத்தந்தை கிங்ஸ்டன் மறையுரை நிகழ்த்தினாா். ஆறுமுகனேரி பங்குத்தந்தை டேவிட் சகாய வளன் முன்னிலை வகித்தாா்.

விழா நாள்களில் தினசரி ஜெபமாலை, திருப்பலி­, மறையுரை, நற்கருணை ஆசீா் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் அன்பியங்கள், மறைக்கல்வி மாணவ, மாணவியா், ஆசிரியா்கள், ஆறுமுகனேரி புனித அந்தோணியாா், புனித சவேரியாா் ஆலய மக்கள், மாதா சபையினா் சாா்பில் திருப்பலி­ நடைபெறும். இத்திருவிழா ஜன. 28ஆம் தேதி வரை 14 நாள்கள் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை பங்குத்தந்தை, அருள்சகோதரிகள், ஆலய நிா்வாகக் கமிட்டியினா், இறை மக்கள் செய்து வருகின்றனா்.