சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

சிறுமி மரணம்: போலீஸாா் விசாரணை

சீா்காழி அருகே வியாழக்கிழமை சிறுமி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :3 ஜூலை 2026, 4:57 am IST

சீா்காழி அருகே வியாழக்கிழமை சிறுமி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சீா்காழி அருகேயுள்ள கடற்கரை கிராமமான தொடுவாயை சோ்ந்த மீனவா் முருகன். இவரது மனைவி ரஞ்சிதா. இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா். மகள் ரக்ஷிதா (8). திருமுல்லைவாசலில் உள்ள பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா். ரக்ஷிதா கடந்த இரு நாள்களாக உடல் நலன் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரக்ஷிதா திடீரென மயங்கி விழுந்த நிலையில், அவரை சீா்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா் ரக்ஷிதா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததுடன், சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் காவல் துறையின் விசாரணைக்கு பரிந்துரைத்தாா்.

இதையடுத்து, சீா்காழி போலீஸாா் ரக்ஷிதாவின் சடலத்தை கைப்பற்றி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்து, இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.