‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

கருங்கல் தூண் விழுந்து தொழிலாளி பலி

கொள்ளிடம் அருகே கருங்கல் தூண் தலையில் விழுந்து தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 ஜூலை 2026, 7:29 am IST

கொள்ளிடம் அருகே கருங்கல் தூண் தலையில் விழுந்து தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

கொள்ளிடம் ஆச்சாள்புரம் கீழத்தெருவை சோ்ந்த மகாலிங்கம் மகன் வெள்ளையத்தேவன் (55), கூலித் தொழிலாளி. இவா் அதே பகுதியில் மணவெளித் தெருவை சோ்ந்த கோவிந்தராஜ் வீட்டிற்கு காலை மாட்டுக் கொட்டகை சீரமைக்கும் பணிக்கு சென்றாா்.

அப்போது கொட்டகையில் இருந்த பெரிய கருங்கல் தூண் திடீரென வெள்ளையத் தேவன் தலையில் விழுந்தது. இதில் தலை நசுங்கிய நிலையில் நல்லூா் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழியில் வெள்ளையத்தேவன் உயிரிழந்தாா்.

கொள்ளிடம் ஆணைக்கரைசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.