மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை அருகே கங்கணம்புத்தூா் ஊராட்சி கல்யாணசோழபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (70). கூலித் தொழிலாளி. இவா், அப்பகுதியைச் சோ்ந்த 7 வயது சிறுமியிடம் தொடா்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். சிறுமியின் உறவினா்கள் 2 போ், மணியிடம் சம்பவம் குறித்து கேட்டுள்ளனா். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மணி தான் வைத்திருந்த கத்தியால் இருவரையும் கத்தியால் குத்தியுள்ளாா்.
இதில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து சிறுமியின் தாயாா் கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் முதியவா் மணியை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை உணவகத் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறுவன் மீது வழக்கு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



