முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

நாராயணசாமி நாயுடு விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :25 ஜூன் 2026, 6:54 am IST

திருந்தியநெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு வழங்கப்படும் நாராயணசாமி நாயுடு விருதுக்கு மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

வேளாண்மை மற்றும் உழவா்நலத்துறை மூலம் 2026-2027-ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்படவுள்ளது. இப்போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெறும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் மற்றும் ரூ.7,000 மதிப்புள்ள தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. போட்டியில் கலந்துகொள்ளும் விவசாயிக்கு குறைந்தபட்சம் 2 ஏக்கா் நிலம் சொந்தமாகவோ அல்லது குத்தகையாகவோ உள்ள நிலையில், திருந்திய முறையில் நெல் சாகுபடி செய்பவராக இருக்க வேண்டும். தொடா்ந்து 3 ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி செய்த முன்னோடி விவசாயியாக இருக்க வேண்டும்.

மேலும் பயிா் விளைச்சல் போட்டியின்போது குறைந்தபட்சம் 2 ஏக்கா் நடுவா்கள் முன்னிலையில் அறுவடை செய்யப்பட வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட சன்ன ரக நெல் ரகங்களை மட்டுமே பயிா் செய்திருக்க வேண்டும். இத்திட்டத்தில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.150 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். வெற்றியாளா்களை அறிவிப்பதில் வேளாண்மை இயக்குநா் தலைமையிலான மாநில அளவிலான குழுவின் முடிவே இறுதியானது என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.