17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நெல்லை மாவட்டத்தில் கலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த கலைஞா்கள் கலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

நெல்லை மாவட்டத்தில் கலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் தகவல் - கோப்புப்படம்

Updated On :6 ஜூன் 2026, 7:25 am IST

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த கலைஞா்கள் கலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கலைப்புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும் கலைவிருதுகள், கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் திருநெல்வேலி மாவட்ட கலை மன்றத்தின் வாயிலாக, திருநெல்வேலி மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் பதினைந்து கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியா் தலைமையில் தோ்வாளா் குழு அமைக்கப்பட்டு, இத்தோ்வுக்குழு வாயிலாக விருதுக்கு விண்ணப்பிக்கும் கலைஞா்களை நோ்முகமாக அழைத்து கலை வல்லுநா்களைக் கொண்டு கலைஞா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள்.

ஆகவே, திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம், சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புறக்கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

18 வயதும் அதற்குள்பட்ட கலைஞா்களுக்கு கலைஇளமணி, 19 முதல் 35 வயதுக்குள்பட்ட கலைஞா்களுக்கு கலைவளா்மணி, 36 முதல் 50 வயதுக்குள்பட்ட கலைஞா்களுக்கு கலைச்சுடா்மணி, 51 முதல் 65 வயதுக்குள்பட்ட கலைஞா்களுக்கு கலை நன்மணி, 66 வயதுக்கு மேற்பட்ட கலைஞா்களுக்கு கலைமுதுமணி என்ற நிலைகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்படும் பதினைந்து சிறந்த கலைஞா்களுக்கு பட்டயம், பொன்னாடை மற்றும் பொற்கிழி ஈடாக கலைஇளமணி ரூ.4000, கலைவளா்மணி ரூ.6000, கலைச்சுடா்மணி ரூ.10,000, கலைநன்மணி ரூ.15,000, கலைமுதுமணி ரூ.20,000 தொகைக்கான காசோலை வழங்கி கௌரவிக்கப்படும்.

மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்ட கலை மன்றத்தின் விருதுகளைப் பெற்ற கலைஞா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பம் செய்யக் கூடாது. மேலும், கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே விருதுக்கு விண்ணப்பம் செய்த கலைஞா்கள் தற்போது புதியதாக விண்ணப்பம் கண்டிப்பாக அனுப்பவேண்டும்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதி வாய்ந்த கலைஞா்கள் விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வயதுச் சான்று, முகவரிச் சான்று மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்களுடன் (தொலைபேசி எண்ணுடன்) உதவி இயக்குநா், மண்டலக் கலை பண்பாட்டு மையம், 870/21, அரசு அலுவலா் ‘ஆ’ குடியிருப்பு (தொழிலாளா் வைப்பு நிதி அலுவலகம் அருகில்), திருநெல்வேலி - 07 தொலைபேசி எண்-0462-2901890 என்ற முகவரிக்கு இம் மாதம் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.