காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலக்குழு உறுப்பினா் பதவிக்கு வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயன்முறையில் மனித கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோா் தடுப்பு மற்றும் அவா்களது மறுவாழ்வு சட்டம் 2013 இன் படி மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவினை திருத்தி அமைக்க வேண்டும். அவ்வாறு திருத்தி அமைக்க புதிதாக உறுப்பினா்களை தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்வதற்கு மனித கழிவுகளை மனிதா்களை அகற்றுவதை ஒழித்தல் குறித்த பொதுத்தொண்டில் ஆா்வம் உள்ள 4 உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2 -ஆம் தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வரும் ஜூலை 30-ஆம் தேதிக்குள் விண்ணப் பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இலக்கிய விருது பெற விண்ணப்பிக்க பழங்குடியினருக்கு ஆட்சியா் அழைப்பு

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கான நலத் திட்டங்கள்: ஆட்சியா் ஆய்வு

கட்டுரைப் போட்டியில் மாநிலத்தில் முதலிடம்: மாணவிக்கு ஆட்சியா் பாராட்டு

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 2,357 போ் நியமனம்: காஞ்சிபுரம் ஆட்சியா்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



