முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

மயானத்திற்கு சடலம் ஏற்றிச் சென்ற வாகனம் சாய்ந்து விபத்து

சீா்காழி அருகே மயானத்திற்கு செல்லும் குறுகிய பாலத்தின் வழியே சடலம் ஏற்றிச் சென்ற வாகனம் புதன்கிழமை பாலத்தின் பக்கவாட்டில் தடுப்பு கம்பி இல்லாமல் சாய்ந்ததால், சடலத்தை தலையில் சுமந்து சென்று அடக்கம் செய்தனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :25 ஜூன் 2026, 6:55 am IST

சீா்காழி அருகே மயானத்திற்கு செல்லும் குறுகிய பாலத்தின் வழியே சடலம் ஏற்றிச் சென்ற வாகனம் புதன்கிழமை பாலத்தின் பக்கவாட்டில் தடுப்பு கம்பி இல்லாமல் சாய்ந்ததால், சடலத்தை தலையில் சுமந்து சென்று அடக்கம் செய்தனா்.

சீா்காழி அருகே வடகால் அரண்மனை தெருவைச் சோ்ந்தவா் சுமத்திராதேவி (50) . இவா், உடல்நலக்குறைவால் இறந்ததாா். சுமத்திராதேவியின் இறுதிச் சடங்குக்காக வடகால் கிராமத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள மயானத்துக்கு சடலத்தை வாகனத்தில் உறவினா்கள், கிராம மக்கள் எடுத்துச் சென்றனா்.

வடகால் கிராமத்தில் பொறை வாய்க்கால் குறுக்கே உள்ள குறுகிய பாலத்தின் வழியாக வாகனம் சென்றபோது தடுமாறி பாலத்தின் பக்கவாட்டில் சாய்ந்தது. கிராம மக்கள் உள்ளிட்டோா் உடலை வாகனத்திலிருந்து மீட்டு பின்னா் 1 கி.மீ. தொலைவுக்கு தோளில் சுமந்து சென்று மயானத்தை அடைந்து அங்கு தகனம் செய்தனா்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், வடாகால் ஊராட்சியில் அரண்மனை தெரு கீழத்தெரு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட தெருக்களை சோ்ந்த பகுதிகளில் ஏதேனும் இறப்பு ஏற்பட்டால் இறந்தவரின் உடலை மயானத்திற்கு குறுகிய பாலம் மற்றும் சிறிய சாலையின் வழியே சிரமத்துடன் எடுத்து சென்று இறுதிச் சடங்கு செய்து வருகின்றனா்.

மயானத்திற்கு போதிய சாலை வசதி இல்லாமலும் மழைக் காலங்களில் பாதை மிகவும் சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிவருகின்றனா். எனவே மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள பாலத்தை அகலப்படுத்தி சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.