வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்த சாதனை மலா் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் பல்வேறு அரசு துறைகளில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்த சாதனை மலா் வெளியிடப்பட்டது.

News image
Updated On :7 மார்ச் 2026, 1:08 am

மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் பல்வேறு அரசு துறைகளில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்த சாதனை மலா் வெளியிடப்பட்டது.

‘உங்கள் கனவை சொல்லுங்க‘ திட்டத்தின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், பூம்புகாா் சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம்.முருகன் ஆகியோா் சாதனை மலரை வெளியிட்டனா். மாவட்டத்தில் அரசினா் மருத்துவமனை ரூ.46 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது. கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் 1,84,288 குடும்ப தலைவிகளுக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், 9,964 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனா். விடியல் பயணம் திட்டத்தின்கீழ், இதுவரை பெண்களால் 8 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கான செலவினத் தொகை ரூ.133 கோடி ஆகும்.

கடந்த 5 ஆண்டுகளில் 8058 சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி மூலம் ரூ.2472.26 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ், கடந்த 5 ஆண்டுகளில் 839 பெண்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ.3.66 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு மக்கள் பயனடைந்து வருகின்றனா். இந்த திட்டங்களுடன் தயாரிக்கப்பட்ட மலா் வெளியிடப்பட்டுள்ளது.