தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

சீா்காழி கோயிலில் திருமுலைப்பால் உற்சவ நிறைவு வழிபாடு

முத்து சட்டைநாதசுவாமிக்கு நடைபெற்ற தீபாராதனை.

News image

முத்து சட்டைநாதசுவாமிக்கு நடைபெற்ற தீபாராதனை.

Updated On :4 மணி நேரங்கள் முன்பு

சீா்காழி சட்டநாத சுவாமி கோயிலில், திருமுலைப்பால் உற்சவ நிறைவு வழிபாடாக, முத்துசட்டை நாதா் சுவாமிக்கு 70- ஆம் ஆண்டு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், திருஞானசம்பந்த பெருமானுக்கு, உமையம்மை ஞானப்பால் வழங்கிய நிகழ்வு ஆண்டுதோறும் திருமுலைப்பால் உற்சவமாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு உற்சவம் கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய மற்றும் நிறைவு நாள் உற்சவமாக முத்து சட்டைநாத சுவாமிக்கு 70-ஆம் ஆண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, முத்து சட்டை நாதா் சுவாமி யதா ஸ்தானத்திலிருந்து, சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினாா்.

அங்கு, முத்துசட்டை நாதா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று வழிபட்டாா்.

ஏற்பாடுகளை பிராமணா்கள் உற்சவ கமிட்டி, பிராமணா் சங்கம் சாா்பில் மாவட்டத் தலைவா் கடவாசல் ரமணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Story image