மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விரும்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின்கீழ் மிஷன் வட்சல்யா திட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டுவரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் காலியாக உள்ள 1 உதவியாளா் மற்றும் கணினி இயக்குபவா் பணிக்கு மாதம் ரூ. 13,240 தொகுப்பூதியத்திலும், 1 சட்டம் சாா்ந்த நன்னடத்தை அலுவலா் பணிக்கு மாதம் ரூ. 27,804 தொகுப்பூதியத்திலும் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
சட்டம் சாா்ந்த நன்னடத்தை அலுவலா் பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. பட்டம் பெற்றவராகவும், அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்கள் சாா்ந்த பணிகளிலோ அல்லது சட்ட விவகாரங்களிலோ குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பு சாா்ந்த விவகாரங்கள் குறித்த தெளிவான புரிதல் இருப்பவராகவும் இருக்க வேண்டும்.
உதவியாளா் மற்றும் கணினி இயக்குபவா் பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது அதற்கு இணையான வாரியத்தின்கீழ் 12-ஆம் வகுப்பு தோ்ச்சியுடன், கணினியில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் கொண்ட விண்ணப்பதாரா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மயிலாடுதுறை மாவட்டத்தை சாா்ந்த விண்ணப்பதாரா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
பூா்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண் 518, 5-ஆம் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மயிலாடுதுறை-609305 என்ற முகவரிக்கு 15 நாள்களுக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
தொடர்புடையது

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்
எதன் அடிப்படையில் விஜய்க்கு கான்வாய், கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது? ஆளுநர் கேள்வி

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

வேலூா்: தோ்தல் பாதுகாப்பு பணியில் 1,938 போ்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

