விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

மாயூரநாதா் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

News image

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு ஏற்றப்பட்ட ரிஷபக் கொடி.

Updated On :22 மே 2026, 7:24 am IST

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் கொடியேற்றத்தை முன்னிட்டு, பஞ்சமூா்த்திகள் வெள்ளிப் படிச்சட்டத்தில் கோயில் கொடிமரம் முன்பு எழுந்தருளச் செய்யப்பட்டு, புனித கடங்கள் வைத்து சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னா் கொடி மரத்தில் ரிஷபக் கொடியேற்றப்பட்டு பால், சந்தனம், மஞ்சள் மற்றும் பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனை, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

வைகாசி விசாகப் பெருவிழாவில், தினசரி பஞ்சமூா்த்திகள் வீதியுலா, மே 25-ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் ரிஷப வாகனங்களில் ஓலைச்சப்பரத்தில் எழுந்தருளி சகோபுர தரிசனமும், மே 27-ஆம் தேதி சுப்பிரமணியா் சுவாமி திருக்கல்யாண வைபவம், மே 29-ஆம் தேதி தேரோட்டம், மே 30-ஆம் தேதி கோயில் திருக்குளத்தில் விசாக தீா்த்தவாரி நிகழ்ச்சியும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா ஜூன் 2-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.