குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் கட்டண தரிசனம் தற்காலிக ரத்து!
குலசை முத்தாரம்மன் கோயிலில் கட்டண தரிசனம் முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது தொடர்பாக...

குலசேகரன்பட்டினம் கோயிலில் தசரா திருவிழாவையொட்டி நடைபெற்ற கொடியேற்றம். - படம்: தினமணி
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா நடைபெற்று வருவதை முன்னிட்டு, கட்டண தரிசனம் முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக். 11ஆம் தேதி தொடங்கிய நிலையில், அக். 21 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, அம்மனை தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
விழாவின் சிகர நிகழ்வான மகிஷாசூரசம்ஹாரம் அக். 20 ஆம் தேதி நடைபெறுகிறது. அக். 21 ஆம் தேதி அதிகாலை கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வர் கோயில் உள்ளிட்ட இடங்களில் அம்மன் எழுந்தருளுகிறார்.
அக். 21ஆம் தேதி தேதி வரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். முக்கிய நாள்களில் 150-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன கோயிலில் தசரா திருவிழா அக்.21 வரை நடைபெறும் நிலையில், திருவிழா நிறைவுபெறும் வரை கட்டண தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் அனைவரும் பொது தரிசன வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Due to the ongoing Dussehra festival at the Mutharamman Temple (with Lord Gnanamoortheeswarar) in Kulasekarapattinam, Thoothukudi district, the paid darshan system has been temporarily suspended.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


