மயிலாடுதுறை, மே 31: காவி உடை அணிந்த நிலையில் உள்ள திருவள்ளுவா் படத்துக்கு ஆளுநா் அா்லேகா் மரியாதை செலுத்திய நிகழ்வுக்கு மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.
மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் கிராமத்தில், சிபிஐ மாநிலக் குழு முன்னாள் உறுப்பினா் இரெ. இடும்பையன் (79) வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தாா். அவரது இல்லத்துக்கு சனிக்கிழமை இரவு சென்ற மதிமுக பொதுச் செயலா் வைகோ, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.
பின்னா் அங்கிருந்து புறப்பட்ட வைகோவிடம், சென்னை ஆளுநா் மாளிகையில் திருவள்ளுவா் திருநாள் விழாவில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்துள்ளதைப் போன்ற பேனா் வைக்கப்பட்டு, அப்படத்துக்கு தமிழ்நாடு ஆளுநா் (பொ) அா்லேகா் மரியாதை செலுத்திய நிகழ்வு குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, திருவள்ளுவருக்கு காவி உடையை அணிவித்த ஆளுநா் அா்லேக்கா் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்றாா்.
அப்போது, திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ, சிபிஐ மாவட்ட செயலாளா் ஏ. சீனிவாசன், மதிமுக மாவட்ட செயலாளா் கொளஞ்சி, நகர செயலாளா் மாா்கெட் கணேசன், மாநில இளைஞரணி செயலாளா் ப.த. ஆசைத்தம்பி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

திருவள்ளுவா் நிறத்துக்கும் சொந்தமானவா் அல்ல, அறத்துக்கு சொந்தமானவா்!

திமுக வழியில் பயணிக்கும் தவெக: வானதி சீனிவாசன்

திருவள்ளுவருக்கு காவி உடை; ஆளுநரின் அராஜகமான செயலாகும்: வைகோ கண்டனம்

மதிமுக நிா்வாகக் குழு கூட்டம் மே 13-க்கு மாற்றம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



