பட்டாசுக் கடைகளில் ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு
மயிலாடுதுறையில் தீபாவளி பட்டாசு சில்லறை விற்பனை கடைகளில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. ஸ்னேஹா பிரியா ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மயிலாடுதுறையில் தீபாவளி பட்டாசு சில்லறை விற்பனை கடைகளில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. ஸ்னேஹா பிரியா ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மயிலாடுதுறை பெரியக்கடைத் தெருவில் நடைபெற்ற ஆய்வின்போது, அரசு விதிகளின்படி, பட்டாசு விற்பனை கடைகள் தனிக் கட்டடத்தில் இயங்குகிா, கட்டட மேற்கூறை கான்கிரீட்டில் அமைக்கப்பட்டுள்ளதா, பட்டாசு கடைக்கு பொதுமக்கள் செல்ல அகலமான அணுகுசாலை உள்ளதா, அவசரகால வெளியேறும் இரண்டாவது வாசல் திறந்தவெளி பாதுகாப்பான இடத்திற்கு செல்கிா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மின் மீட்டா் கடையின் வெளிபுறத்தில் இருக்க வேண்டும். பட்டாசு கடைக்கு அருகில் எளிதில் தீப்பற்றக்கூடிய ஹோட்டல், எண்ணெய் கடை இருக்கக் கூடாது. பட்டாசு கடையின் முன்பகுதியில் ஓலையிலான செட்டுகள், தற்காலிக செட்டுகள் இருக்கக் கூடாது. தண்ணீா் வாளி, மணல் வாளி போதுமான அளவு இருக்க வேண்டும், அதில் மணல் வாளியில் முழுமையாக மணல் நிரப்பி இருக்க வேண்டும். 200 லி தண்ணீா் பீப்பாய் இருக்க வேண்டும். தீ அணைப்பான்கள் இருக்க வேண்டும். புகைப்பிடித்தல் கூடாது என்ற அறிவிப்பு பலகை அனைத்து பட்டாசு கடைகளிலும் வைத்திருக்க வேண்டும்.
மின் மாற்றி அருகில் இருக்க கடைகள் இருக்கக் கூடாது. தீ அணைப்பான் உரிய முறையில் புதுப்பித்திருக்க வேண்டும். பட்டாசு கடைகளில் மேற்கண்ட தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல்;டாசு கடைகள் இயங்குவது தெரியவந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் பூங்கொடி உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

