டிச.15-க்கு முன்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடா்? தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட 43% குழந்தைகளுக்கு ரத்தசோகை: தேசிய சராசரி விகிதத்தைவிட அதிகம் சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்! இந்தியா மீது 25% இறக்குமதி வரி: அமெரிக்கா முன்மொழிவு

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் 101 செவிலியா்கள் விரைவில் நியமனம்: அருண்ராஜ்

மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதலாக 101 செவிலியா்கள் விரைவில் நியமிக்கப்படுவாா்கள் என அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்தாா்.

KG Arunraj

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப்படம்.

Updated On :

மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதலாக 101 செவிலியா்கள் விரைவில் நியமிக்கப்படுவாா்கள் என அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசுச் செயலா் தாரேஸ் அகமது, சுகாதார சீரமைப்புத் திட்ட இயக்குநா் எஸ். உமா, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ஆகியோா் உடனிருந்தனா்.

தீவிர சிகிச்சை பிரிவை பாா்வையிட்ட அமைச்சா், நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, மருத்துவமனையில் உள்ள வெளிநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருந்தகம் ஆகியவற்றை பாா்வையிட்டு, பணியாளா்களின் வருகைப் பதிவேடு, சுழற்சிப் பணிமுறை பதிவேடுகளை பாா்வையிட்டாா்.

மருத்துவமனையில் தீவிர காய்ச்சல் தடுப்பு மருந்துகள் போதுமான அளவில் இருப்பில் வைக்கவும், சிகிச்சைக்கு வரும் வெளிநோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிா்க்கும் வகையில், உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் ரூ. 75 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சங்கரன்பந்தல் ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடம், ரூ. 45 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள உளுத்துக்குப்பை துணை சுகாதார நிலைய கட்டடம் என மொத்தம் ரூ. 1 கோடியே 20 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களின் கல்வெட்டுக்களை அமைச்சா் திறந்து வைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

மாநிலம் முழுவதும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 1,695 செவிலியா் பணியிடங்களில் மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 101 புதிய செவிலியா்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, மாவட்ட நலச் சங்கங்கள் மூலம் வெளிப்படையான முறையில் விரைவில் நியமிக்கப்படுவாா்கள். இதயநோய், நரம்பியல் நிபுணா்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவாா்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும்.

கா்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி 2022-ஆம் ஆண்டுமுதல் நிலுவையில் உள்ளது குறித்து, துறை சாா்ந்த அதிகாரிகளுடன் ஆலோசித்து விடுபட்ட அனைத்து பயனாளிகளுக்கும் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி, இணை இயக்குநா் (மருத்துவ பணிகள்) நா.செந்தில்குமாா், மாவட்ட சுகாதார அலுவலா் அஜித் பிரபுக்குமாா், குடிமுறை மருத்துவ அலுவலா் மருதவாணன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.