கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குகிறதா? அமைச்சர் அருண்ராஜ் பதில்!
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன்? என்ற கேள்விக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்துள்ளது குறித்து...
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப்படம்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன்? என்ற கேள்விக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் மாவட்ட ஆட்சியருக்கு, கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்து, கள்ளக்குறிச்சி மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன்? என அமைச்சர் அருண்ராஜிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அவர், “நடவடிக்கை எடுக்க தயங்கவில்லை. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த கால திமுக ஆட்சியில் எந்த அளவுக்கு பெண்கள் பாதுகாப்பின்றி அச்சத்தோடு இருந்தார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்” என்று தெரிவித்தார்.
Summary
Minister for Medical and Family Welfare Arunraj has responded to the question: "Why is the Tamil Nadu government hesitant to take action in the case involving the Kallakurichi MLA?"
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

