கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் கருத்து தெரிவிக்க வேண்டும்! பெ. சண்முகம்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தனது கருத்தைத் தெரிவித்து மக்களின் சந்தேகத்தை போக்க வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தல்...

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம். - கோப்புப் படம்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தனது கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ ஒரு பாலியல்ரீதியான குறுஞ்செய்தியை அனுப்பினார் என்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு மாவட்ட ஆட்சியர் என்பவர் மாவட்ட பாதுகாப்பிற்கு பொறுப்பு. இத்தகைய குற்றங்கள் நடந்தால் அதைத் தடுக்க வேண்டிய இடத்தில் மாவட்ட ஆட்சியர் இருக்கிறார். அவருக்கே இப்படி ஒரு நிலைமை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
இந்த விவகாரத்தில் எம்எல்ஏ மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
ஆனால், அமைச்சர் நிர்மல் குமார் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, வதந்தி என்று கூறியிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறார். அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றால் அவர் மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும். மாறாக, அரசு சார்பிலும் குற்றம்சாட்டப்பட்டவரும் மறுப்பு தெரிவிக்கிறார்கள்.
மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த சந்தேகத்தை போக்க வேண்டியது மாவட்ட ஆட்சியரின், அரசின் பொறுப்பு" என்று கூறியுள்ளார்.
Summary
District Collector must comment on the Kallakurichi MLA issue: Shanmugam
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


