ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் காலமானார்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை: அமித் ஷாவிடம் அறிக்கை அளித்தார் தமிழக ஆளுநர் ஆர்லேகர்!கொளத்தூர் அரசுப் பள்ளி உணவுக் கூடத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!தவெக 6 மாத ஆட்சியில் 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரூ. 1.14 லட்சம் கோடி முதலீடுகள்தமிழக காவல்துறை அதிரடி: 3 நாள்களில் 1,049 ரௌடிகள் கைதுதென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது!8 நாள்களில் ரூ. 1,000 கோடி வசூலித்த ராமாயணா!

கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் முதல்வர் மௌனம் கலைக்க வேண்டும்! அண்ணாமலை

கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம் தொடர்பாக அண்ணாமலை கூறியது பற்றி..

Annamalai

அண்ணாமலை - video crop

Updated On :

கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் முதல்வர் தனது மௌனத்தைக் கலைத்து உண்மை நிலையை மக்களுக்கு விளக்க வேண்டும் என 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.

கோவை, கணியூர் அருகே உள்ள சேடர்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற பட்டத்தரசி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் அண்ணாமலை கலந்துகொண்டார். அவருக்கு ஊர் மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம் தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகிறது. அரசு நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்காமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒரு மாவட்டத்தின் ஆட்சியராகப் பெண் அதிகாரி இருப்பதே பெருமைக்குரிய விஷயம். அவருக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., யாரேனும் பிரச்னை ஏற்படுத்தியிருந்தால், முதல்வர் தாமாக முன்வந்து விளக்கம் அளிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ., மோசமான குறுஞ்செய்தி அனுப்பினாரா, இல்லையா என்பதுதான் எளிய கேள்வி. அனுப்பியிருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அப்படி எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். எல்லா விஷயங்களையும் மூடி மறைத்தால் அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்படும். இந்த விவகாரம் குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சங்கமும் மௌனம் கலைக்க வேண்டும்.

மாற்றத்தை விரும்பி 35 சதவீத மக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துள்ளனர். ஆனால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாள்களில் மட்டும் ரூ. 441 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை நடைபெற்றுள்ளது. தீபாவளி அன்று தமிழகத்தில் 15 முதல் 17 கொலைகள் வரை நடந்துள்ளன. முந்தைய ஆட்சியைக் குறை கூறுவதை விட்டுவிட்டு, காவல்துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும். தீபாவளிக்கு முன்பே ரவுடிகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. உள்துறை பொறுப்பை வகிக்கும் முதல்வர் இந்த விவகாரங்களில் விழிப்புடன் செயல்பட்டு, வேகமாகக் களத்தில் இறங்க வேண்டும்.

ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதங்கள் முடிந்துள்ள நிலையில், ஆட்சியின் நிறை, குறைகள் குறித்து ஓராண்டு நிறைவடைந்த பிறகுதான் முழுமையாகப் பேசுவோம். அதற்குள் எதிர்க்கட்சிகள் பேரம் பேசி எம்.எல்.ஏ.,க்களை இழுத்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முயன்றால், அது எதிர்க்கட்சிகளுக்கே பின்னடைவாக அமையும். ஏற்கெனவே இடைத்தேர்தல் தொடர்பான குழப்பங்கள் உள்ள நிலையில், மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த ஆட்சிக்குக் குறைந்தபட்சம் ஓராண்டுக் காலமாவது தார்மீக அவகாசம் வழங்க வேண்டும்.

சோனியா காந்தி எழுதிய 'பிலாங்கிங்' என்ற சுயசரிதை புத்தகத்தை தற்போது படித்து வருகிறேன். மாற்றுச் சித்தாந்தம் கொண்ட தலைவராக இருந்தாலும், 1984-ம் ஆண்டு சீக்கியர் கலவரம், அவசரநிலை பிரகடனம், 2004-ம் ஆண்டு பிரதமர் பதவியை ஏற்காதது, இரண்டு முறை புற்று நோயிலிருந்து மீண்டது உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளை அந்தப் புத்தகத்தில் அவர் பதிவு செய்துள்ளார். அதில் சில கருத்துகளில் வேறுபாடுகள் இருந்தாலும், அவரது பார்வையை அறிந்து கொள்வதற்கு அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் அது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.