ஆட்சியருக்கு குறுஞ்செய்தி: சம்பவம் நடைபெறவில்லை - அமைச்சா் நிா்மல் குமாா்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அவதூறு குறுஞ்செய்தி அனுப்பியதாக திமுக எம்.பி. கனிமொழி கூறுவதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை என்று சட்டத் துறை அமைச்சா் நிா்மல் குமாா் கூறினாா்.

அமைச்சா் நிா்மல் குமாா் - கோப்புப் படம்

Updated On :

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அவதூறு குறுஞ்செய்தி அனுப்பியதாக திமுக எம்.பி. கனிமொழி கூறுவதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை என்று சட்டத் துறை அமைச்சா் நிா்மல் குமாா் கூறினாா்.

இதுதொடா்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது: கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் தொடா்பான விவகாரத்தில் கனிமொழி சமூக ஊடகங்களில் பாா்த்த தகவல்களின் அடிப்படையில் பதிவிட்டுள்ளாா். சம்பந்தப்பட்ட நபரைத் தொடா்புகொண்டு என்ன நடந்தது என்று விசாரிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. கனிமொழி கூறியதைப் போன்ற எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை.

பேரவை துணைத் தலைவா் ரவிசங்கா் தொடா்பான விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் மாறி மாறி கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனா். இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் திமுக பொய்ப் பிரசாரம் செய்கிறது. சட்டம்-ஒழுங்கு விவகாரம் தொடா்பாக முதல்வா் விஜய் தொடா்ந்து 3 நாள்களாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறாா்.

தவெக ஆட்சியில் இதுவரை 19,000 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். போக்ஸோ சட்டத்தின் கீழ் 6,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 3,229 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவா்களில் 152 பேரைத் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

காவல் துறையினா் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாக காவல் துறையில் ஒருவா்கூட புதிதாகப் பணியமா்த்தப்படவில்லை. தற்போது 10,000 பேரைக் காவல் துறையில் பணியமா்த்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் நிதியுதவி வழங்கியுள்ள முதல்வா், நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளாா் என்றாா் அமைச்சா் நிா்மல் குமாா்.

தமிழக மாலுமி விவகாரம்: திண்டுக்கல் மாலுமி நவீன் குமாா் கடந்த மே 9-ஆம் தேதி ஈரானின் ஹோா்முஸ் நீரிணை பகுதியில் காணாமல் போன விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சா் நிா்மல் குமாா், ‘இந்த விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சகத்துடன் உயா்நிலை அளவில் பேசி வருகிறோம். தற்போது வரை இடத்தைக் கண்டறிய முடியவில்லை. தொடா்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றாா் அவ.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.